பிப்.12.
மகாராஷ்டிரா, ஆந்திரா, அசாம், பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத்தலைவர் திரவுபதிமுர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். சிபி .ராதாகிருஷ்ணன் கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழிசை சௌந்தரராஜன், இல. கணேசனை தொடர்ந்து மூன்றாவதாக தமிழகத்தைச் சேர்ந்த இவர் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மணிப்பூர் ஆளுநராக இருந்த இல.கணேசன் நாகாலாந்து மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழக பாஜக முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம். செய்யப்பட்டுள்ளார். அருணாச்சலப் பிரதேசம் மாநில ஆளுநராக திரிவிக்ராம் பர்னாயக், சிக்கிம் ஆளுநராக லட்சுமணன் பிரசாத் ஆச்சார்யா, இமாச்சலப்பிரதேச ஆளுநராக பிரதாப் சுக்லா, அசாம் மாநில ஆளுநராக குலாப் சந்த் கட்டாரியா, ஆந்திர மாநில ஆளுநராக அப்துல் நசீர், சத்தீஸ்கர் மாநில ஆளுநராக பிஸ்வா பூஷன் ஹரிச்சந்திரன், மணிப்பூர் மாநில ஆளுநராக அனுசுயா, மேகாலயா மாநில ஆளுநராக பகு சவுகான், பீகார் மாநில ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத், மகாராஷ்டிரா மாநில ஆளுநராக ரமேஷ் பைஸ், லடாக் மாநில ஆளுநராக மிஸ்ரா, ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.