ஏப்.14.
முதலமைச்சர் மு.கஸ்டாலின், அண்ணல் அம்பேத்கரின் 135 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பாக பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதைத் தொடர்ந்து கரூர் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் இன்று நடைபெற்ற விழாவில் மாவட்ட கலெக்டர் தங்கவேல் 1049 பயனாளிகளுக்கு ரூ.7.03 கோடி மதிப்பீட்டிகான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். எம்எல்ஏக்கள் இளங்கோ (அரவக்குறிச்சி), சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மேயர் கவிதா கணேசன் முன்னிலை வகித்தனர். முன்னதாக அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அண்ணாரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி சமத்துவ நாள் உறுதி மொழியினை அனைவரும் எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், உதவி ஆணையர் கருணாகரன், துணை மேயர் ப.சரவணன், மாநகராட்சி ஆணையர் சுதா. மண்டலகுழு தலைவர் ராஜா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் சக்திபாலகங்காதரன் தாட்கோ மேலாளர் முருகவேல், ஆர்டிஓ முகமதுபைசல், தாசில்தார்கள் குமரேசன், மகேந்திரன், குணசேகரன் .மைதிலி கலந்துகொண்டனர்.