டிச.25.
2021 – 22 ஆம் ஆண்டுக்கான வேளாண்மைத்துறை மானிய கோரிக்கையில் கரூர் மாவட்டத்தில் வேளாண்மை கல்லூரி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி கரூர் மாவட்டத்தில் புதிய வேளாண்மை கல்லூரி அமைக்க தமிழக அரசு ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணையை வெளியிட்டுள்ளது.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தமிழக முதல்வருக்கு கோடான கோடி நன்றி என தெரிவித்துள்ளார்.அதில், வேளாண்மைக்கும் வாழ்க்கைக்குமான கல்வியை பல்லாயிரம் மாணவர்கள் பயின்று பயன் பெரும் வகையில்,
கரூர் மாவட்டத்திற்கு “அரசு வேளாண்மைக் கல்லூரி” வழங்கி, அதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கிய, விவசாயிகளின் நம்பிக்கை நமது முதல்வர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, கரூர் மாவட்ட மக்கள் சார்பாக கோடான கோடி நன்றிகளை காணிக்கையாக்குகிறேன். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார்.