ஜன.11.
கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இன்று நடைபெற்றது. சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் வரும் நாட்டு நாட்டு பாடலுக்கு வழங்கப்பட்டது. இந்த பிரிவில் விருது பெரும் முதல் ஆசிய திரைப்படம் ஆர் ஆர் ஆர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி விருதை பெற்றுக் கொண்டார் விழாவில் இயக்குனர் ராஜமௌலி ஜூனியர் என்டிஆர் ராம்சரண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.