ஏப்.6.
கரூர் மாவட்டத்தில் தமிழகத்திலேயே அதிக அளவு வெயில் சுட்டெரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 100 டிகிரியைத் தாண்டி வந்த வெயில் 106 டிகிரி என உச்சத்தை தொட்டுள்ளது. தேர்தல் நாள் நெருங்கி வருவதால் அனல் பறக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து கரூர் அருகே உள்ள புலியூரில் இன்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் திறந்த வேனில் நின்று பேசி ஆதரவு திரட்டினார். வெயில் கொடுமை தாங்க முடியாமல் ஜிகே வாசன் குச்சி ஐஸ் வாங்கி சாப்பிட்டார். வேட்பாளர் செந்தில்நாதன், விடியல் சேகர் ஆகியோரும் ஐஸ் சாப்பிட்டனர்.