அக்.2.
கரூர் தாந்தோன்றிமலை கதர் அங்காடியில் இன்று தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் திருஉருவப்படத்திற்கு கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தீபாவளி சிறப்பு தள்ளுபடி முதல் விற்பளையை நுவக்கி வைத்தார்.
2023-2024-ம் ஆண்டு கரூர் மாவட்டத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையின் போது ரூ.92 இலட்சம் மதிப்புள்ள கதர் ரங்களை விற்பனை செய்யப்பட்டது. நடப்பாண்டு காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இம்மாவட்டத்திற்கு ரூ.178 லட்சம் மதிப்புள்ள கதர் ரகங்களை விற்பனை செய்திட தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தால் இயக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை இலக்கினை முழுமையாக எய்திடும் பொருட்டு அனைத்து அரசு அலுவலர்களுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும் மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்ற பணியாளர்களுக்கும் எளிய கடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கதர் விற்பனையை ஊக்கப்படுத்துவதற்கும். வாடிக்கையாளர்களின் நலன் கருதியும் மத்திய மாநில அரசுகளால் சிறப்புத் தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளன. கதர், பாலியஸ்டர் மற்றும் பட்டு ரகங்களுக்கு 30% சில பட்டு ரகங்களுக்கு 50%. எனவே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கதரங்காடிகள் மற்றும் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் துவக்கப் பட்டுள்ள தற்காலிக கதர் விற்பனை நிலையங்களில் பெருமளவில் கதர் ரகங்கள் வாங்குவதன் மூலம் கிராமப்புற ஏழை நூற்போர் நெய்வோர் வாழ்வின் ஒளி ஏற்றிடும்படி அரசுப் பணியாளர்கள் மற்றும் பொது மக்களை கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் அலகுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் தேன். குளியல் சோப்புகள் பற்றும் சலவைசோப்புகள், பத்தி சாம்பிராணி, மெழுகுபர்த்தி, ஜவ்வாது வலி நிவாரணி தைலம் மற்றும் ஷாம்பு பனைப் பொருட்கள் உள்ளிட்ட பல்ல பொருட்கள் சுதரங்காடியில் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. மேலும் இவ்வாண்டு மகளிர் சுய உதவிக் குழுவின் தயாரிப்புகள் மற்றும் உழவர் நிறுவன அமைப்புகளின் தயாரிப்புகளை கொள்முதல் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் காதி கிராப்ட் பொருட்களைnline wepsite: www.tnkvib.org என்ற ஆன்லைன் மூலமும் வாங்கலாம் என கலெக்டர் தெரிவித்தார்.
இவ்விழாவில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் உதவி இயக்குநர் சீனுவாசன், செய்திமக்கள் தொடர்பு அலுவலர் தினசெந்தில்குமார். கதரங்காடி மேலாளர் முத்துசாமி கலந்துகொண்டனர்.