மே.23.
கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம். வெண்ணைமலை வாயிலாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் (TNPSC) தேர்வாணையத்தால் TNPSC-Gr-IV. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது. மேலும் TNUSRB-SI TNPSC GR-L ஆகியபோட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்புகளில்SmartBoard. இலவச Wiசதி. அனைத்துபோட்டித்தேர்வுகளுக்கானபுத்தகங்கள் அடங்கியநூலக வசதி. பயிற்சி கால அட்டவணை, நாள்தோறும் சிறுதேர்வுகள் (Spot test) வாராந்திரத்தேர்வுகள், இணையவழித்தேர்வுகள் (online test) முழு மாதிரி தேர்வுகள். மென்பாடக்குறிப்புகள் எடுத்துக்கொள்ள இணையதளத்துடன் கணிணிவசதியுடன்பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டித் தேர்வினை எதிர்கொள்ளவிருக்கும் மாணவ மாணவியருக்கு, தேர்வினை சிறந்த முறையில் எழுதி வெற்றிபெற வழிவகுக்கும் வகையில், மாநில அளவிலான TNPSC Gr-IV மாதிரி தேர்வுகள்24.06.2025, 02.07.2025, 09.07 2025 ஆகிய தேதிகளிலும், TNPSC Gr மாதிரி தேர்வுகள் 27.05.2025 03.06.2025 மற்றும் 07.06.2025ஆகிய தேதிகளிலும் கரூர் வேலைவாய்ப்பு طوری دارس தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்நடைபெறவுள்ளது. மாநில அளவில் நடத்தப்படும் இம்மாதிரி தேர்விற்கு கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 23.05.2025 தேதிக்கு முன் நேரடியாக பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 6383050010என்ற தொலைபேசி எண் வாயிலாக தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது இவ்வாய்ப்பினை கரூர் மாவட்டத்தைச் சார்ந்த ஆண்/பெண் இருபாகர்களும் பயன்படுத்திக்கொள்ளுமாறு கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.