மே.14
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் 3935 காலிப். பணிக்காலியிடங்களுக்கான TNPSC Group-IV அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு 12.07.2025 அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.
இம்மையத்தில் பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் காற்றோட்டமான அறை, குடிநீர் வசதி. Smart Board இலவச Wifi வசதி. அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூல்க வசதி. பொது அறிவுக்கான மாத இதழ்கள், பயிற்சி கால அட்டவணை, நாள் தோறும் சிறு தேர்வுகள், மென்பாடக் குறிப்புகள் எடுத்துக்கொள்ள இணையதளத்துடன் கூடிய கணினி வசதி என அனைத்து வசதிகளுடன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது.
இப்பயிற்சி மையத்தில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட TNPSC-Gr-4 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வருவாய் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையில் பயிற்சி பிரிவு, மருத்துவ துறை போன்ற பல்வேறு அரசுத் துறைகளில் பணி நியமன ஆணை பெற்றுள்ளனர். TNPSC Gr-IV போட்டித் தேர்வினை சிறந்த முறையில் எழுதி வெற்றிபெற வழி வகுக்கும் வகையில், ஒவ்வொரு புதன் கிழமையும் மாதிரி தேர்வுகள், ஒவ்வொரு சனிக்கிழமையும் வாரத் தேர்வுகள், மண்டல அளவில் மாதிரித் தேர்வுகள் மற்றும் மாநில அளவில் முழு மாதிரித் தேர்வுகள் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள இளைஞர்கள் உடனடியாக கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நேரடியாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04324-223555, 6383050010 என்ற தொலைபேசியினை தொடர்பு கொள்ளவும். இவ்வாய்ப்பினை TNPSC போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் அனைத்து இளைஞர்களும் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்டகலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.