ஜன.11.
2022-23 ஆண்டிற்கான 50,000 புதிய இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை 11/11/22 அன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இன்று 50,000வது விவசாயிக்கு மின் இணைப்பு ஆணை வழங்கிடும் ஆணையினை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார்.
2022-23 ஆண்டிற்கான 50,000 புதிய இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
2011-2021 வரை 10 ஆண்டுகளில் வெறும் 2 லட்சம் இலவச மின் இணைப்புகளை அதிமுக அரசு வழங்கியது.
ஆனால் ஆட்சிக்கு வந்து ஒன்னரை ஆண்டுகளில் ஒன்னரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கி மகத்தான சாதனை புரிந்துள்ளது திமுக அரசு.
50000 விவசாய இணைப்பு பெற்ற விவசாயிகளின் பட்டியலை முதலமைச்சரிடம், மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்.