டிச.15.
உலக கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் நடைபெற்று வருகிறது. அல்பேத் மைதானத்தில் 2 வது அரையிறுதி போட்டி நள்ளிரவு நடைபெற்றது. பிரான்ஸ்- மொராக்கோ அணிகள் மோதின.
பிரான்ஸ் அணி வீரர் தியோஹெர்னான்டஸ் முதல் கோல் அடித்தார். முதல் பாதிஆட்டத்தில் பிரான்ஸ் அணி 1-0 என்று முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதி ஆட்டத்தில் கோலோமுவனி கோல் அடித்தார். கூடுதல் ஆட்ட நேரம் வழங்கப்பட்டது. எனினும் மொராக்கோ வீரர்கள் கோல் அடிக்கவில்லை. இதனால் 2-0 என்கிற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது. நான்காவது முறையாக உலக கோப்பை தொடர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
அதேசமயம் உலக கோப்பை போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் மொராக்கோ வீரர்கள் சிறப்பாக ஆடி அரை இறுதி வரை வந்தனர். அரைஇறுதிக்குள் நுழைந்த முதல் ஆப்பிரிக்கா அணி மொராக்கோ என்ற சாதனையை பெற்றது. இறுதிப் போட்டிக்குள் நுழையாததால் அந்நாட்டு ரசிகர்கள் மிகுந்த சோகம் அடைந்தனர் . வரும் ஞாயிறன்று இரவு 8:30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் பிரான்ஸ் -அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.