ஏப்.21.
அதிமுகவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உட்கட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது.
அதில் முதல் கட்டமாக கரூர் மாவட்டம் உட்பட 25 மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர், மாவட்டநிர்வாகிகள், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என மாவட்ட அளவிலான பதவிக்கான அமைப்பு தேர்தல் இன்று நடைபெற்றது.
கரூர் மாவட்டகட்சி அலுவலகத்தில்இன்று இத்தேர்தல் நடைபெற்றது. கரூர் மாவட்டத்திற்கு அமைப்பு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர், சேலம் புறநகர் மாவட்ட ஜெ. பேரவை செயலாளர்.இளங்கோவன்,
ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கர் ஆகியோரிடம் தேர்தலில் மாவட்ட செயலாளர் பதவிக்காக முன்னாள் அமைச்சர், விஜயபாஸ்கர் விருப்ப மனு அளித்தார். அவரை எதிர்த்து யாரும் விருப்ப மனு செய்யாததால் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் மாவட்ட துணைச் செயலாளர், அவைத்தலைவர் இணைச் செயலாளர்கள், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்காக நிர்வாகிகள் விருப்ப மனு அளித்தனர்.