பிப்.21.
சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற மாநகராட்சி வார்டு தேர்தலில் திமுக நிர்வாகி ஒருவர் கள்ள ஓட்டு போட வந்ததாகக் கூறி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் அதிமுகவினர் அவரை தாக்கினார். பின்னர் அவரது சட்டையை கழற்றி கையைக் கட்டி இழுத்துச் சென்றனர். சிறிது நேரத்தில் தர்ணா போராட்டம் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட 41 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக நிர்வாகி நரேஷ் என்பவரை தாக்கியதாக கொடுத்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயக்குமார் கார் ஓட்டுநர் அளித்த புகாரில் 10 திமுகவினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றவாளியையே போலீசார் இவ்வாறு அழைத்துச் செல்வது தவறு, மனித உரிமை மீறல் என பல நிகழ்வுகளில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் சட்டத்தைக் கையில் எடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பதைத் தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் இவ்வழக்கில் போலீசாரால் தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் ஜெயக்குமார் இருந்து வருகிறார்.
இபிஎஸ். கண்டனம்
சென்னையில் ஜெயக்குமார் கள்ள ஓட்டு போட வந்தவரை விரட்டி பிடித்து முறையாக காவல்துறையினரிடம் ஒப்படைத்தது தவறு என்று முதலமைச்சர் சொல்கிறாரா? இதற்கு என்ன பதில் முதலமைச்சர் சொல்ல போகிறார்,அஇஅதிமுக சட்டரீதியாக எதையும் சந்திக்க தயார் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.