பிப்.21.
சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற மாநகராட்சி வார்டு தேர்தலில் திமுக நிர்வாகி ஒருவர் கள்ள ஓட்டு போட வந்ததாகக் கூறி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் அதிமுகவினர் அவரை தாக்கினார். பின்னர் அவரது சட்டையை கழற்றி கையைக் கட்டி இழுத்துச் சென்றனர். சிறிது நேரத்தில் தர்ணா போராட்டம் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட 41 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக நிர்வாகி நரேஷ் என்பவரை தாக்கியதாக கொடுத்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயக்குமாரை இன்று அவரது வீட்டில் போலீசார் கைது செய்தனர் அவரது ஆதரவாளர்கள் சிறிது நேரம் போலீசாருடன் வாக்குவாதம் நடத்தினர். அதன் பேரில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.