ஏப்.18.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வளையப்பட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரத்தின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் உருவச்சிலை திறப்பு விழா நடைபெற்றது. இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான விஜயபாஸ்கர் தலைமை வகித்தார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றினார். முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் சின்னச்சாமி சிவபதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.