டிச.1.
கரூரில் ARS INSTITUTE OF SCIENCE AND MANAGEMENT ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரி.கரூர், சூர்யா கேஸ் ஏஜென்சி மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் நிறுவனத்தின் SENSE OF DUTY CAMPAIGN எனும் தலைப்பில் உணவு சமையல் போட்டி நடைபெற்றது. இதில் மனநல மருத்துவர் டாக்டர் தமிழ் செல்வன், அவரது மனைவி வனிதா, செப் ராமசாமி , சூர்யா கேஸ் ஏஜென்சியின் உரிமையாளர் செந்தில் ,ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவர் ஆதிகேசவன் ஆகியோர் கலந்துகொண்டனர். எ.ஆர்.எஸ் ஹேட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரியின் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர். இதில் முதல் பரிசாக 2000/- ரூபாய் , இரண்டாம் பரிசாக 1000/- ரூபாய் , மூன்றாம் பரிசாக 500/- ரூபாயும் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது . வெற்றி பெற்றோர்களுக்கு முன்னாள் எம்.எல்.ஏ வடிவேல், வனிதா பரிசுத்தொகை மற்றும் வெற்றிக்கோப்பையும் வழங்கி கவுரவித்தனர்.