பிப்.26.
கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூர் நோக்கி சென்ற அரசு பேருந்தும், திருச்சி நோக்கி வந்த மாருதி காரும் நேருக்கு நேர் மோதியது. அரசு பேருந்தின் முன் பகுதியில் சிக்கிய கார் நொறுங்கியது. சம்பவ இடத்திற்கு விரைந்த குளித்தலை போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். முசிறி தீயணைப்பு படை வீரர்கள் போராடி மீட்டபோது காரின் ஓட்டுநர் மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் உடல் நசுங்கி இறந்தது தெரியவந்தது. உடலை மீட்ட குளித்தலை போலீசார், பிரேதப் பரிசோதனைக்காகக் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில், கோவை மாவட்டம் சுகுணாபுரம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (52), அவர் மனைவி கலையரசி (42), மகள் அகல்யா (25), மகன் அருண் (22) ஆகியோருடன் சிவராத்திரிக்காக ஒரத்தநாடு கீழையூரில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிட சென்றதும், ஈரோடு மாவட்டம் வில்லரசன்பட்டியைச் சேர்ந்த விஷ்ணு (24) கார் ஓட்டிவந்ததும் தெரியவந்தது.
கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல், எஸ்.பி, ப்ரோஸ் கான் அப்துல்லா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.