மார்ச்.28.
கரூர் மாவட்டம், ஆட்டையாம்பரப்பு குள்ளம்பட்டி என்ற கிராமத்தில் காலியான விவசாய கிணறு ஒன்றில் தூர் வாரும் பணிக்காக சந்தோஷ் குமார், சரவணன், சாமிநாதன், ஆனந்த் ஆகிய 4 பேர் சென்று இறங்கினார். அதில் சந்தோஷ் குமார் (24), சரவணன் (33) ஆகிய இருவர் ராட்டை அறுந்ததாலா கிணற்றில் விழுந்து விட்டனர். மயக்கமுற்று கிணற்றினுள் விழுந்து விட்டதாக கரூர் தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக உதவி மாவட்ட அலுவலர் சந்திரகுமார் தலைமையில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்றனர்.. கரூர் நிலைய அலுவலர் திருமுருகன் மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாக கிணற்றில் இறங்கி கயிறு மூலம் ஸ்ட்ரெச்சர் கட்டி காயமடைந்தவர்களை உயிருடன் மேலே கொண்டு வந்தனர். சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.