மே.28.
பிரசித்திபெற்ற கரூர் அருள்மிகு மாரியம்மன் திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கரூர் அமராவதி ஆற்றுக் கரையிலிருந்து சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கம்பம் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்து நடப்பட்டதில் இருந்து தினமும் பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபட்டு வந்தனர். இன்று மாலை கம்பம் விடும் திருவிழா நடைபெற்றது. சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் மாரியம்மன் கோவிலில் இருந்து கம்பம் எடுத்து வந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதி உலா நடைபெற்றது. வழிநெடுக பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கம்பம் சாமி அமராவதி ஆற்றை அடைந்ததும், சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டிருந்த அகழியில் விடப்பட்டது. அப்போது பிரம்மாண்டமான வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது . ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டனர். மாரியம்மன் திருவிழாவையொடடி கரூர் மாவட்டத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாவட்ட நிர்வாகம் இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்திருந்தது. நூற்றுக்கணக்கான போலீசார் கரூர் மாவட்டம் மட்டுமின்றி புதுக்கோட்டை பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களில் இருந்தும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.