நவ.25.
கரூரில் பாலியல் துன்புறுத்தலால் உயிரிழக்கும் கடைசி பெண் நானாக இருக்க வேண்டும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் குற்றவாளிகளை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை.
இந்நிலையில், மாணவி படித்த பள்ளியின் கணித ஆசிரியர் சரவணன் என்பவர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே செங்காட்டுப்பட்டியில் உள்ள தனது மாமனார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆசிரியர் சரவணன் தற்கொலை செய்வதற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார் அதில் எல்லோரும் என்னை சந்தேகப் படுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
தற்கொலை செய்துகொண்ட ஆசிரியர் சரவணன் எழுதிய கடிதம்-