நவ.5.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி இலங்கை அணியை தோற்கடித்தது. இதனால் ஆஸ்திரேலியா ரன் ரேட் அடிப்படையில் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. குரூப் ஒன்றில் கடைசி சுற்று லீக்ஆட்டத்தில் இன்று இலங்கை -இங்கிலாந்து அணிகள் விளையாடின . இலங்கை அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 141 ரன் எடுத்தது நிசங்கா 67 ரன்கள் குவித்தார். அடுத்து பேட் செய்த இங்கிலாந்து அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். முதல் விக்கட்டுக்கு 74 ரன்கள் குவித்திருந்தும் 111 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கட்டுகளை இழந்து திணறியது. பின்னர் நிதானமாக ஆடி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 19.4 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது . ஆஸ்திரேலியா அணி உலக கோப்பையில் இருந்து வெளியேறியது.