ஜன.6.
கரூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத்திருத்தம். 2025 இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவவர் மற்றும் கலெக்டர் தங்கவேல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், (தனி) குளித்தலை ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளின் 2025-ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல்கள் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், கரூர் மற்றும் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள் மற்றும் அனைத்து முக்கிய வாக்குச்சாவடி அமைவிடங்கள் ஆகிய இடங்களில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு அவர்களது பெயர் புகைப்படம் மற்றும் இதர பதிவுகள்: சரியாக உள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்ளலாம்.
மேலும் வாக்காளர்களுக்கு ஏற்படும் அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வளிக்கும் வகையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து தகவல்கள், பின்னூட்டங்கள், ஆலோசனைகள் மற்றும் புகார்கள் ஆகியனவற்றை 1950 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு அழைத்து தெரிவிக்கலாம். மேலும், தேசிய வாக்காளர் சேவை இணையதளமான https.//voter.eci.gov.in/ அல்லது Voters helpline என்ற மொபைல் செயலி மூலமாகவும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பொது சேவை மையங்களிலும் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம் என மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், குளித்தலை சார் ஆட்சியர் சுவாதிஸ்ரீ, வருவாய் கோட்டாட்சியர் முகமதுபைசல், மாநகராட்சி ஆணையர் சுதா, யுரேகா, தேர்தல் வட்டாட்சியர் முருகன். உதவி தேர்தல் அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.