ஆக.19.
மாவட்ட நிர்வாகம்- மாவட்ட முன்னோடி வங்கி ஆகியவை இணைந்து நடத்தும் கல்விக்கடன் வழங்கும் முகாம் 21.08.2024.
22.08 2024, 27.08.2024. 28.08.2004 அன்று நடைபெறவுள்ளது. கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கி ஆகியவை இணைந்து நடத்தும் கல்விக்கடன் வழங்கும் முகாம் கரூர் மாவட்டத்திற்குட்பட்ட கீழ்கண்ட நான்கு இடங்களில் அன்று காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெற உள்ளது.
கரூர் மாநகராட்சி -கரூர், தாந்தோணி ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் பேரூராட்சிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு 21.08.2004 (புதன்கிழமை) அன்று இந்தியன் ஓவர்சிஸ் வங்கி மாவட்ட முன்னோவங்கி KVR காம்ப்ளக்ஸ் 80அடிரோடு செங்குந்தபுரம் கரூரில் நடைபெறுகிறது.
அரவக்குறிச்சி, க.பரமத்தி ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் பேரூராட்சிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு 22.08.2004 |வியாழக்கிழமை) அன்று அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் நடைபெறுகிறது.
கடவூர் மற்றும் தோகைமலை ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் பேரூராட்சிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு 27.08.2004 செவ்வாய்கிழமை அன்று தோகைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறுகிறது.
குளித்தலை நகராட்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் பேரூராட்சிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு 28.08.2004 புதன்கிழமை அன்று குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இந்த கடன் வழங்கும் முகாமில் இாங்கலை மற்றும் முதுகலைப் பட்ட மாணவ, மாணவிகள் கல்வி கடன் பெற மாணவ மாணவிகள்
www.vidyalakshmi.co.in
என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்த விண்ணப்ப நகல், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரின் இரண்டு புகைப்படம் Joint Account வங்கி கணக்கு நகல், இருப்பிடச்சான்று, வருமானச் சான்று, சாதிச்சான்று நகல், பான்கார்டு ஆதார் அட்டை நகல், கல்லூரியில் இருந்து பெறப்பட்ட அசல் Bonafide சான்றிதழ், கல்லூரியில் இருந்து பெறப்பட்ட அசல்கல்விக் கட்டண விபரம், 10,12ஆம்வகுப்பு மற்றும் இதர பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று, கலந்தாய்வு மூலம் பெறப்பட்ட சேர்க்கைக்கான அசல் ஆணை ஆகிய ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொள்ளவேண்டும்.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் கல்வி கடன் பெற மேற்கண்ட ஆவணங்களுடன் முகாம் நடைபெறும் நாளன்று காலை 10மணி முதல் மாலை 4மணி வரை முகாமில் கலந்து கொண்டு உடனடியாக கல்விக்கடன்பெற்று பயன்பெறுமாறும் மேலும் விபரங்களுக்கு மாட்ட முன்னோடி வங்கி அலுவலகத்தை நேரிலோ அல்லது 04324 234815, 9442613165 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.