அக்.18.
தூத்துக்குடியில் நடைபெற்ற போலீஸ் துப்பாக்கி சூடு குறித்த அறிக்கை வெளியானது . சட்டப்பேரவையில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
சட்டசபையில் எதிர்க்கட்சித் துணை தலைவருக்கான இருக்கையை மாற்ற வேண்டும் எனக் கூறிய எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் ரகளையில் ஈடுபட்டனர். நாளையும் இது தொடர்பான விவாதம் வரும் என்பதால் சட்டசபையை புறக்கணித்து போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் மற்றும் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் குறித்த விசாரணை அறிக்கை வெளியானது ஆகியவற்றை திசை திருப்ப இவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சபாநாயகர் அப்பாவு கண்டனம் தெரிவித்தார்.
மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்துஅப்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜாவைத்தியநாதன், போலீஸ் டிஜிபி ராஜேந்திரன், உளவுத்துறை ஐஜி.சத்தியமூர்த்தி ஆகியோர் நிமிடத்திற்கு நிமிடம் அப்போதைய முதல்வருக்கு தகவல் கொடுத்திருந்தது அறிக்கையில் அம்பலமாகியுள்ளது. முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி துப்பாக்கி சூடு சம்பவத்தை டிவியை பார்த்துத்தான் நான் தெரிந்து கொண்டேன் என அப்போது பேட்டி அளித்தார். இது குறித்து கமிஷன் அறிக்கையில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். இது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.