டிச.10.
கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பு-
புத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர் என்ற பெயரில் ஒரு சில போலியான நபர்கள் பல்வேறு அரசு சாரா இயக்கங்களை சேர்ந்தவர்கள் இடைத்தரகர்கள் தங்களுக்கு உயர் அலுவலர்களை தெரியும் எனவும்.அவர்களிடம் கூறி உங்கள் கோரிக்கைளை நிறைவேற்றி தருகிறேன் என்று பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு அவர்களிடம் ஏமாற்றி பணத்தை பறித்துவிடுவதாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனுக்கள் வரபெற்றுள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளது மட்டுமின்றி காவல்துறை மூலமாக வழக்கு பதிவு செய்யப்படும்.
மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவகை மற்றும் அணைத்து அரசுத்துறை அலுவகைங்களிலும் மேற்கண்ட போலியான நபர்கள் அடையாள அட்டை பயன்படுத்தி. பொது மக்களை ஏமாற்றும் மோசடி செயல்களில் ஈடுபடுவது தெரிய வருகிறது. அந்தநபர்கள் கண்டறியப்படும் பட்சத்தில் அவர்கள் மீது உரிய மேற்கொள்ளப்படும். அரசு பணியில் உள்ள அலுவலர்களிடம் பணிக்கு இடையூறு அளிக்கும் வகையில் பிறரின் கோரிக்கை மனுக்களை பெற்று அரசுத்துறைக்கு பரிந்துரை செய்வதாக நபர்கள் குறித்து உடனடியாக தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறை மூலமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.