அக்.25.
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்ஞத்தில் கலெக்டர் கூறுகையில்,
தமிழ்நாடு அரசால் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரூர் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் விவசாயிகள் குறைதீர்க்கும். நாள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும். கோரிக்கைகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அடுத்த 10 முதல் 15 நாட்களுக்குள் தொடர்புடைய விவசாயிகளுக்கு அஞ்சல் மூலம் பதில் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் போதுமான அளவில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், யூரியா 1462 மெட்ரிக் டன்னும், டிஏபி 570 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 930 மெட்ரிக் டன்னும், என்பி.கே. 1907 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 4869 மெடன் இரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் நெற்பயிர் சாகுபடிக்காக CO 50. CR 1009, ADT 53. ADT 54. TKM 13. CO 55 29.900 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள், கப்பு கோ 10. சோளம் C032, K12, ஆகியவை 46.500 மெட்ரிக் டன்னும், பயிறு வகை பயிர்கள் உளுந்து VBN-8 4. VEN 10 கொள்ளு பையூர் 2 ஆகியவை 12875 மெட்ரிக் டன்னும் மற்றும் எண்ணெய் வித்துக்கள், நிலக்கடலை தரணி கோ-6. கோ-7, டிஎம்வி 14. எள் -டி.எம்.வி 7 ஆகியவை 4.790 மெட்ரிக் டன்னும் இருப்பில் உள்ளது.
கரூர் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவு 652.20 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டு அக்டோபர் 2024 வரை 532.79 மி.மீ மழை பெய்துள்ளது. அதேபோன்று, அக்டோபர் மாதம் முடிய 18.675 ஹெக்டர் பரப்பளவில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி உரிய முறையில் விவசாயப் பணிகள் மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். மேலும் கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு நச்சலூர், சிந்தலவாடி மற்றும் கள்ளை என 3 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் குறைந்த வாடகையில் பயிர்களுக்கு மருத்தடிக்கும் ட்ரோன்கள் கிடைக்கும். இதை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
கரூர் மவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பாக 21வது கால்நடை கணக்கெடுப்பு பணியினை தொடங்கிவைக்கும் வகையில் அதற்குறிய செயலியின் சேவையை தொடங்கி வைத்து கணக்கெடுப்பு பணியாளர்களுக்கான அட்டைகளை வழங்கினார்.
முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் ட்ரோன்கள் மூலம் பயிர்களுக்கு மருந்தடிக்கும் செயல்முறை விளக்கம் விவசாயிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன். குளித்தலை சார் ஆட்சியர் ஸ்வாதிஸ்ரி, கூட்டுறவு சங்ககளின் இணைப்பதிவாளர் கந்தராஜா, கால்நடை பராமரிப்புத்துறையின் இணை இயக்குநர் சாந்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சண்முக வடிவேல், வேளாண் அலுவலர் உமா, கரூர் ஆர்டிஓ முகமதுயைசல், உதவி ஆணையர் கலால் கருணாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.