ஏப்.28.
2024 கரூர் மக்களவை பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சட்டமன்ற தொகுதிவாரியாக புகளூர் வட்டம், குமாரசாமி பொறியியல் கல்லூரி வளாக கட்டிடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை 04.06.2024 அன்று நடைபெற உள்ளதால் வாக்கு எண்ணிக்கை மையமான குமாரசாமி பொறியியல் கல்லூரி வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 05.06.2024 வரை ட்ரோன்கள் உள்ளிட்ட எவ்வித கண்காணிப்பு மற்றும் வீடியோ கேமாரக்கள் இயக்கப்படுவது தடை செய்யப்படுகிறது என தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் மாவட்ட கலெக்டர் தங்கவேல், தெரிவித்துள்ளார்.