ஜூன்.12.
போக்குவரத்துதுறையின் கீழ் இயங்கி வரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம் தொடர்பான பணிகளுக்கு மோட்டார் வாகனச் சட்டப்படி 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமம் பெறவோ அல்லது ஓட்டுநர் உரிமத்தினை புதுப்பிக்கவோ விண்ணப்பிக்கும் பொழுது சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களுடன் அரசு பதிவு செய்யப்பட்ட மருத்துவர் அல்லது மருத்துவ பயிற்சியாளரிடம் இருந்து பெறப்பட்ட மருத்துவ தகுதிச்சான்றினை படிவம்-1 A-ல் Manual ஆக Sarathi Portal பதிவேற்றம் செய்து விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலோ அல்லது பகுதி அலுவலகங்களிலோ சமர்பிக்கும் நிலை உள்ளது.
இதில் சில நிகழ்வுகளில் மருத்துவச்சான்றின் உண்மைத் தன்மையினை அறிய சிரமமாக உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு பணிமுடித்து தர காலதாமதமும்,போலியான சான்றிதழ் பரிவர்த்தனைகளும் ஏற்படுகிறது.
இதனை தவிர்க்க ஏதுவாக போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர், சென்னை அவர்களால் பதிவு செய்யப்பட்ட மருத்துவரே தங்களுக்கென தனியாக User Name மற்றும் Password உருவாக்கி சம்பந்தப்பட்ட மருத்துவரே விண்ணப்பதாரருக்கு மருத்துவ தகுதிச்சான்றினை தனது ஒப்பத்துடன் பதிவேற்றம் செய்ய உரிய வழிமுறையின் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தநடைமுறை 13.06.2024 முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதன் பிறகு Manual ஆக மற்றும் இணையம் அல்லாத வழியில் பதிவேற்றம் செய்யும் மருத்துவ தகுதிச்சான்றுகளை இவ்வலுவலகத்தில் ஏற்றுக் கொள்ள இயலாது.
மேலும் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பயிற்சியாளர்கள் Sarathi Portal ல் User Name Password உருவாக்கி அதன் வழியாக மருத்துவ தகுதிச் சான்றினை பதிவேற்றம் செய்தல் வேண்டும் என கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.