மார்ச்.19..
ஏபிவிபி அமைப்பின் முக்கிய நிர்வாகியும், மருத்துவருமான சுப்பையா சண்முகம் சென்னையில் கைதுசெய்யப்பட்டார். சென்னை ஆதம்பாக்கத்தில் மூதாட்டி வீட்டின் வாசலில் அநாகரீகமாக நடந்து கொண்டதை அடுத்து அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் சுப்பையாஇன்று கைதானார்.
2020ம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்பில் பார்க்கிங் பிரச்சனையால் மூதாட்டி வீடு வாசலில் சிறுநீர் கழித்து தவறாக நடந்து கொண்டதாக சிசிடிவி காட்சியுடன் புகார் அளிக்கப்பட்டது.புகார் மீது வழக்கு பதிந்தும் அப்போதைய அரசுஅவரை கைது செய்யவில்லை.
.ஏபிவி.பி.யின் முன்னாள் தலைவராக செயல்பட்ட மருத்துவர் சுப்பையா, அரசு ஊழியர்களுக்கான ஒழுங்கு நடத்தை விதிமுறைகளை மீறியதாக எழுந்த புகாரை அடுத்து மருத்துவ கல்வி இயக்குனரகம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சுப்பையா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுமட்டுமின்றி அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் செயலாளர் நிதி திரிவேதி மற்றும் அந்த அமைப்பினை சேர்ந்த மாணவர்கள் உட்பட சிலர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வீடு அருகே முன்னறிவிப்பின்றி நள்ளிரவில் திடீரென ஆர்ப்பாட்டம் செய்து கோஷங்களை எழுப்பினர். மேலும் கைது செய்ய முற்பட்டபோது போலீசாரை பணி செய்ய விடாமலும், முறைகேடாகவும் நடந்துகொண்டனர். போலீசாரை பணி செய்யாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்வாகிகளை டாக்டர் சுப்பையா சென்று சந்தித்துள்ளார். மேலும் இது தொடர்பாக இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தமிழக கவர்னரிடம் மனு கொடுக்க சென்றனர். அப்போது சுப்பையாவும் உடன் சென்றார்.