பிப்.16.
பொதுமக்கள் தங்களுடைய கைபேசி எண்ணிற்கு வரும் OTP ஆதார், பான், அல்லது வங்கிக் கணக்கு விவரங்களை தேவையில்லாத எண்களிலிருந்து வரும் அழைப்புகளில் பகிரக்கூடாது என விழிப்புணர்வு கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.
கரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் தங்கவேல் தலைமையில், தேசிய பாதுகாப்பான இணைய தினத்தை முன்னிட்டு அனைத்து அரசுத் துறை அலுவலர்களுடன் விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில்,
தகவல் தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டினால் பொது மக்களுக்கு ஏற்படும் தீங்குகளைக் குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. உலகளவில் இணைய பயனர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் இணையவழிக் குற்றங்களும் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் தங்களுக்கு வரும் OTP, ஆதார், பான், பண பரிவர்த்தனை அறிவிப்பு விவரங்களை தேவையில்லாத எண்களிலிருந்து வரும் அழைப்புகளில் பகிரக்கூடாது. மேலும் ஆதாரமற்ற ஆதார் பரிவர்த்தனை பற்றிகவனமாக இருக்க வேண்டும். KYC புதுப்பிப்பு என்ற பொரில் PAN ஆதார் அல்லது வங்கிக் கணக்கு உங்களுக்கு தெரியாத நபர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல் (email) மற்றும் (WhatsApp) உள்ள இணைப்பினை கிளிக் செய்ய வேண்டாம்.
பொதுமக்கள் தங்களுக்கு தெரியாத நபர்களிடமிருந்து உங்களின் விபரம் மற்றும் பணம் பற்றிய விபரங்களை கோரும் அழைப்புகளை தவிர்த்து விடுங்கள். பரிவர்த்தனையில் பொது QR குறி ஸ்கேன் செய்தல் மற்றும் OTP/PIN தகவல்களைப் பரிமாறுதலின் போது பணமோசடி செய்யும் நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். கைப்பேசிகளுக்கு TRAI அல்லது தொலைதொடர்பு துறையினரிடமிருந்து அழைப்பதாக வரும் குரல் அழைப்புகளின் அடிப்படையில் எந்த செயல்களையும் தவிர்க்க வேண்டும். வலைத் தளங்களில் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களைப் பகிராதிருந்து, தங்களுடைய எண் அடையாளத்தினை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். உண்மையான பார்சல் சேவை நிறுவனங்கள் முன்பதிவு செய்யாத பார்சலுக்கு ஒருபோதும் கட்டணம் வசூல் செய்வதில்லை. செயலிகளை இடைவெளிகளில் மதிப்பாய்வு செய்து, கைபேசியில் தேவையற்ற செயலிகளையும், நீண்ட நாட்களாக பயன்படுத்தாத செயலிகளையும் உங்கள் கைப் பேசியிலிருந்து உடனடியாக நீக்கி விட வேண்டும்.
எந்தவொரு அரசாங்க நிறுவனமும் (காவல்துறை மத்தியப் புலனாய்வுத் துறை அமலாக்கத்துறை) ஒளிப்படம் அல்லது குரல் அழைப்புகளின் மூலம் விசாரணை செய்யவோ கைது செய்யவோ, முடியாது. பொதுஇடங்களில் அருகலை (WIFI) பயன்படுத்தி முக்கியமான தகலங்களை பரிமாறுதல் மற்றும் பரிவர்த்தனை தவிர்க்க வேண்டுமென கலெக்டர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், தேசிய தகவல் மைய மாவட்ட அலுவலர் கண்ணன்,, தனித்துணை ஆட்சியர். பிரகாசம், . இணை இயக்குநர் செழியன், ஆர்டிஓ முகமது பைசல், கலால் உதவி ஆணையர் கருணாகரன், பச்சமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.