மார்ச்.11.
உக்ரைன் மீது உக்ரைன் மீது ரஷிய படைகள் இரண்டு வாரங்களாக கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. இதுவரை 18 மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளன. இந்நிலையில் உக்ரைனில் உள்ள மகப்பேறு மருத்துவமனை மீது குண்டு வீச்சு நடந்து உள்ளது .இதற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்து வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், அதிகாரத்தை அடைவதற்காக மனிதநேயத்தை இழந்து விடாதீர்கள். மனிதநேயமின்றி மருத்துவமனைகள் மீதும் மகப்பேறு மருத்துவமனைகள் மீதும் குண்டு வீசுவது கண்டிக்கத்தக்கது. ரஷ்யாவின் அத்துமீறல்களுக்கு உலகநாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உலக நாடுகளின் கண்டனத்திற்கு பயந்து ரஷ்யா இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.