செப்.24.
எதிர்வரும் 31.10.2024 ஆம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க உரிமம் பெற விரும்புவோர் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே தற்காலிக உரிமம் பெறும் வகையிலும், தங்களது பட்டாசு வியாபாரத்தை உரிய நேரத்தில் தொடங்குவதற்கு ஏதுவாக, கீழ்கண்டுள்ள விதிமுறைகளை கடைபிடித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் இணைய வழியில் (Online) சேவை மையத்தின் மூலமாகவோ, பொது சேவை மையம் மூலமாகவோ, வெடிமருத்து சட்டம், விதிகளை முறையாக கடைபிடித்து தற்காலிக பட்டாசு கடைகள் இடத்தினை பொதுமக்களுக்கு சிரமம் இல்லாமல் பாதுகாப்பான இடமாக தேர்வு செய்து ஆட்சேபணை இல்லாத இடத்திற்கு மட்டும் விண்ணப்பம் செய்ய தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பட்டாக விற்பனை செய்யப்படும் கடைகளில் மேல்மாடி இருக்க கூடாது. அருகில் மருத்துவமனைகள். வழிபாட்டுத்தலங்கள் எளிதில் தீப்பற்றும் பொருட்கள் உள்ள பகுதிகள் கட்டிடங்கள் இருத்தல் கூடாது. இது போன்ற நிபந்தனைகளை கடைபிடிக்க விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதற்கு முந்தைய காலங்களில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடத்தில் வைக்க உரிமம் பெற்றவர்கள் தற்போதைய விண்ணப்பத்துடன் முன்னர் பெற்ற உரியநகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
கீழ்கண்டுள்ள விவரங்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்
அமைக்கவிருக்கும் இடத்தின் வரைபடம் Blue Prints . கடை அமைக்கவிருக்கும் இடத்தின் பட்டா மற்றும் ஆவணங்கள் உரிய கணக்குத் தலைப்பின் கீழ் அரசுக் கணக்கில் தற்காலிக பட்டாசு உரிமக்கட்டணம் IFHRMS என்ற இணையதளத்தில் செலுத்தியதற்கான அசல் செலுத்துச் சீட்டு.
மனுதாரர் தற்காலிக பட்டாக உரிமம் கோரும் இடத்தின் உரிலையாளர் எனில் அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்பு ஆண்டின் சொத்து வரி செலுத்திய நகல்கள். வாடகை இடம் எனில் செலுத்திய ரசீது நகலுடன் இடத்தின் உரிமம் ரூ 20 க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் கடிதம்.
முகவரி ஆதாரமாக ஆதார் அட்டை குடும்ப அட்டை பேன் கார்டு ஸ்மார்ட்கார்டு. பாஸ்போர்ட் அளவு புகைப்படம். விண்ணப்பதாரர்கள் மேற்குறிப்பிட்டுள்ள ஆவணங்களுடன் இணையவழியின் மூலமாக கணியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் வழங்கப்படும் என கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.