அக்.20.
கரூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் தலைவர் – கரூர் எம்.பி. ஜோதிமணி தலைமையிலும், துணைத் தலைவர் பெரம்பலூர் எம்.பி. கே.என். அருண் நேரு உறுப்பினர் மற்றும் செயலர்- கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் 2019-2020 நிதியாண்டில் 888 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இரண்டு வீடுகளை தவிர அனைத்து வீடுகளின் பணிகளும் முடிவுற உள்ளது. 2021-2022 நிதியாண்டில் 2396 வீடுகள் ஒதுக்கீடு பெற்று 2335 வீடுகள் முழுமையாக பணி நிறைவு பெற்று உள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ்2024-2025 நிதியாண்டில் 157 ஊராட்சிகளிலும் 698 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு 1,47,369 பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர். தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் 2022-2025 உள்ளடக்கிய நிதி ஆண்டில் 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் 8977 தனிநபர் கழிப்பறைகள் ரூ.575 வட்சம் மதிப்பீட்டிலும், 22 சமுதாய சுகாதார வளாகம் ரூ.149.16 லட்சம் மதிப்பீட்டிலும், 90 சிறிய சுகாதார வளாகம் ரூ.192.79 மதிப்பீட்டிலும் ஒதுக்கீடு செய்து பணிகள் முழுமை அடையும் தருவாயில் உள்ளது.
மேலும் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் 2023-24 நிதியாண்டில் 23 சாலைகள் ரூ.4709.972 லட்சம் மதிப்பில் நிர்வாக அனுமதி பெற்று அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் 15 சாலைகள் புதுப்பிக்கும் பணிகளுக்கு ரூ.905.53 லட்சம் மதிப்பில் நிர்வாக அனுமதி பெற்று பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் ஜல் ஜீவன் மெஷின் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் வீடுகளுக்கு ஒரு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள். 15 ஆவது மத்திய நிதி குழு மானிய பணிகள், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் திட்டப் பணிகள், ஊரக இளைஞர் வேலைவாய்ப்பு திட்டம், பிரதம மந்திரி விவசாய நீர்ப்பாசன திட்டம், பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம். மண்வள அட்டை இயக்கம், மின்னணு தேசிய வேளாண் சந்தை, வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டம், பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம், பாரத பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டம். பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், மானாவாரி பகுதி மேம்பாட்டு திட்டம் ஊரக மின் மயமாக்கல் திட்டம். ஒருங்கிணைக்கப்பட்ட மின் மேம்பாட்டு திட்டம், புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறை திட்டம், தேசிய ஊரக குடிநீர் திட்டம். தூய்மை பாரத இயக்கம், அட்டல் புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான திட்டம். தேசிய சுகாதார இயக்கம். பெண் குழந்தைகளை பாதுகாப்போம் மற்றும் கற்பிப்போம். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மேம்பாட்டு திட்டம். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மதிய உணவு திட்டம். தேசிய சமூக பாதுகாப்பு திட்டம். டிஜிட்டல் இந்தியா நில ஆவணங்கள் நவீன மயமாக்குதல் திட்டம். அன்னபூர்ணா திட்டம். தேசிய உணவு பாதுகாப்பு சட்டம். பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்னயோஜனா திட்டம், மாவட்ட கனிம கட்டமைப்பு அறக்கட்டளை, பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜண, பிரதான் மந்திரி ஜன் விகாஸ் கார்யக்ரம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம்,
கேயோ இந்தியா. நேரு யுவகேந்திரா, வட்டார அளவிலான பொது சேவை மையம், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக துறை சார்ந்த அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்கவும், நிதி தேவைப்படும் பணிகளுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கி மேல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. என குழு தலைவர் ஜோதிமணி தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம்(குளித்தலை). இளங்கோ(அரவக்குறிச்சி), சிவகாமசுந்தரி, (கிருஷ்ணராயபுரம்), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்லன், மாநகராட்சி ஆணையர் சுதா, மகளிர் திட்ட இயக்குனர் பாபு. குளித்தலை சார் ஆட்சியர் ஸ்வாதிஸ்ரீ. கரூர் ஆர்டிஓ முகமது பைசல், கிராம பஞ்சாயத்து தலைவர்கள், அலுவல் சாராத உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.