செப்.15.
கரூர் மாவட்டத்தில் செயல்படும் எரிபொருள் நிலையங்கள், வர்த்தகங்கள், பொதுமக்கள் மற்றும் குறிப்பாக வங்கிகளில் 10 ரூபாய் நாணயத்தை பொதுமக்களிடமிருந்து ஏற்க மறுக்கிறார்கள். அனைத்து வணிகர்கள் மற்றும் வங்கிகள் வர்த்தகத்தின் போது பொதுமக்கள் தங்களிடமுள்ள 10 ரூபாய் நாணயத்தை அளிக்கும் பட்சத்தில் ஏற்க மறுக்காமல் பெற்றுக்கொள்ளப்படவேண்டும். என் அனைத்து வணிகர்கள், எரிபொருள் நிலையங்கள், வர்த்தகங்கள், பொதுமக்கள் மற்றும் வங்கிகள் ஆகியோர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் மேற்படி இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறும் கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.