அக்.25.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அதிமுக தொண்டர்களின் இயக்கம்; இரட்டை தலைமையின் கீழ் கட்சி சிறப்பாக செயல்படுகிறது, சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்றார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து கூறுகையில், சசிகலாவை எதிர்த்தே ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார்-
சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.