நவ.9.
சென்னை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கிய முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக ஆட்சியில் வெள்ளத்தடுப்பு திட்டம். சிறப்பாக செயல்பட்டது அதை பின்பற்றாமல் மெத்தனமாக இருந்தால் தான் இப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். 10 ஆண்டுகால ஆட்சியில் பலமுறை வெள்ளத்தில் மக்களை தவிக்க விட்ட ஆட்சியாளர்கள் இப்போது இப்படி பேசியதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் வந்து கொண்டுள்ளது.
இயக்குனர் சேரன் ஒரு படி மேலே போய் கடந்த ஆட்சியில் மத்திய அரசில் இருந்து வாங்கிய 900 கோடி பைலை எடுங்க என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்து ட்வீட் செய்துள்ளார்.
அதன் விபரம்-
மழை பாதிப்பு வந்தால் தண்ணீர் தேங்காமல் வெளியேற திட்டம் தீட்டி சென்னைக்கு மட்டும் மத்திய அரசிடம் 900 கோடிக்கு மேல் வாங்கினார்களே முந்தைய ஆட்சியில்… இதுதான் அந்த திட்டத்தில் செயல்படுத்திய நகரமா.. இந்த ஃபைல முதல்ல எடுங்க @CMOTamilnadu அய்யா.
என்று தனியும் இந்த….
என குறிப்பிட்டு வெள்ளம் சூழ்ந்த பகுதியில் எடுத்தவீடியோவையும் வெளியிட்டுள்ளார்.