ஏப்.15.
மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நேற்று இரவு மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெற்ற து. பரபரப்பாகவும். எதிர்பாராத திருப்பங்களுடனும் இந்த ஆட்டம் அமைந்தது. ரோகித் சர்மா அடித்த சதம் பேசப்படவில்லை. டோனி அடித்த 20 ரன்கள் பேசப்படுகிறது..
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் ரச்சின் ரவீந்திரா மற்றும் ரஹானே இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். 8 பந்துகளை எதிர்கொண்ட ரஹானே, 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 21 ரன்கள் எடுத்த நிலையில் ரச்சின் ரவீந்திரா வெளியேறினார். அவரை மும்பை அணியின் ஸ்ரேயஸ் வெளியேற்றினார். தொடர்ந்து ஷிவம் துபே களத்துக்கு வந்தார். ஹர்திக் வீசிய 10-வது ஓவரில் மூன்று பவுண்டரிகள் எடுத்தார். 13-வது ஓவரில் அரைசதம் கடந்தார் ருதுராஜ்.
28 பந்துகளில் அரைசதம் விளாசினார் துபே. ருது ராஜ் அதிரடியாக விளையாடினார். 40 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து ருதுராஜ் அவுட் ஆனார். அவரது விக்கெட்டை ஹர்திக் பாண்டியா கைப்பற்றினார். அடுத்ததாக தோனி களம் கண்டார். வழக்கமான பாணியில் பதற்றம் இன்றி நிதானமாக அதிரடியாக ஆடினார். எதிர்கொண்ட முதல் மூன்று பந்துகளையும் செக்ஸர்களாக பறக்க விட்டு வாண வேடிக்கை நிகழ்த்தினார். அடுத்த பந்தில் 2 ரன்கள் எடுத்தார். அதோடு சென்னை சூப்பர் கிங்ஸின் பேட்டிங் இன்னிங்ஸ் முடிந்தது. 4 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார் தோனி. இறுதி வரை ஆடிய துபே 38 பந்துகளில் 66 ரன்கள் எடுத்திருந்தார். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது சிஎஸ்கே.

அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி ஆடத் துவங்கியது. ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இணைந்து முதல் விக்கெட்டுக்கு இருவரும் 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். வெற்றி பாதையை நோக்கி சென்று கொண்டிருந்த மும்பை அணியின் போக்கை பதிரனா மாற்றினார். அடுத்தடுத்து விக்கட்டுகளை வீழ்த்தினார். சூர்யகுமார் யாதவை டக் அவுட் செய்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் எல்லை கோட்டுக்கு அருகே வந்த பந்தை அபாரமாக கேட்ச் பிடித்தார். இந்த ஓவர் தான் சிஎஸ்கேவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
கடைசி மூன்று ஓவர்களில் மும்பை வெற்றிக்கு 53 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரில் ரொமாரியோ ஷெப்பர்டை போல்ட் ஆக்கினார் பதிரனா. கடைசி ஓவரில் ரோகித் சர்மா சதம் விளாசினார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 186 ரன்களே எடுக்க முடிந்தது. ரோகித், 63 பந்துகளில் 105 ரன்கள் எடுத்திருந்தார். அவரது சதம் வெற்றிக்கு கை கொடுக்கவில்லை.
20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
பதிரனா, 28 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். சென்னை அணிக்கு சரியான நேரத்தில் விக்கெட் வீழ்த்தி கொடுத்திருந்தார் அவர். நடப்பு சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை பெற்றுள்ளது சிஎஸ்கே.

