பிப்.4.
திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் குற்ற கலந்தாய்வு கூட்டம் DGP முனைவர் சைலேந்திரபாபு, தலைமையில் நடைபெற்றது. குற்ற வழக்கில் சிறப்பாக பணியாற்றிய காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு டி.ஜி.பி. . சைலேந்திரபாபு பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார். இந்நிகழ்வில் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன், திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணசுந்தர், கரூர் மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 5 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கரூர் மாவட்டத்தில் POCSO வழக்கில் சிறப்பாக செயல்பட்டு 20 வருட சிறை தண்டனை பெற்றுக் கொடுத்த குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்க்கரசி, சைபர் கிரைமில் சிறப்பாக செயல்பட்டு எதிரிகளை விரைந்து பிடித்த உதவி ஆய்வாளர் சையத் அலி மற்றும் தனி பிரிவில் சிறப்பாக பணிபுரிந்த முதல் நிலை காவலர். மோகன்ராஜ் மற்றும் காவலர் கதிர்வேல் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கப்பட்டது.