அக்.12.
கரூர் மாவட்டம் கடவூர் வட்டார வனத்துறை பகுதியில் அறிய வகை உயிரினமான தேவாங்குகள் உள்ளன. சமீபத்திய கணக்கெடுப்பின்படி 3200 எண்ணிக்கையிலான தேவாங்குகள் இங்கு உள்ளதாக அறியப்படுகிறது. இங்குள்ள காப்பு காட்டில் தேவாங்குகள் சரணாலயமாக அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது..
தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் இன்று தேவாங்கு சரணாலயம் அமைக்க உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் முதல் தேவாங்கு சரணாலயம் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 11 ஆயிரத்து 86 எக்டேரில் அமைய இருக்கிறது. அழிந்து வரும் தேவாங்கு இனத்தை பாதுகாக்க தமிழக அரசு ஆணை வெளியிட்டு மேல்நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது.