பிப்.22.
https://www.facebook.com/share/v/1Bfmspcumr
தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்திய “பெற்றோர்களைக் கொண்டாடுவோம்” விழாவில் பள்ளிக்கல்வித் துறை சார்பில், 234/77 கள ஆய்வு காணொலி மற்றும் தமிழ்நாடு பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் “அப்பா” எனும் செயலி ஆகியவற்றை வெளியிட்டு, ரூ.177.38 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, ஏராளமான பொதுமக்கள் வழிநெடுகிலும் எழுச்சியுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். முதலமைச்சர் சாலையில் நீண்ட தூரம் நடந்து சென்று பெண்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த உற்சாக வரவேற்பினை ஏற்றுக் கொண்டு, அவர்களுடன் உரையாடி. பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார். மேலும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடன் செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
234/77 (ஒருமைக்கண்) செயலியை வெளியிடுதல்
“ஒருமைக்கண்” செயலி என்பது தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் 77 பொருண்மைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் 234/77 திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளை ஆய்வு செய்தமைக்கான தகவல்கள் மற்றும் அறிக்கைகளை கொண்ட மின்புத்தகம் (E-Book) ஆகும். திருக்குறள் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் விளக்கம் இந்த செயலியின் மின் புத்தகத்தின் தொடக்கத்தில் இடம்பெறுகிறது. இத்தகைய செயலி முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு, அரசுப் பள்ளி ஆய்வுகளுக்கான தமிழ்நாட்டில் விரைவான அணுகுமுறைக்கு வித்திடுகிறது. இச்செயலியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
அப்பா செயலி
தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் சங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ள இச்செயலி சமீபத்திய தளம் மற்றும் தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. பெற்றோர். ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்பு இடைவெளியைக் குறைப்பதற்கும், அதன்மூலம் ஒட்டுமொத்த கல்வி அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் இந்த புதுமையான தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்செயலியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
இச்செயலி அன்றாட தகவல் பகிர்வு மற்றும் துறை தொடர்பான அரசு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்வதை எளிதாக்குகிறது. அத்துடன் அனைத்து உத்தரவுகளையும் இதில் காணலாம். சுமார் 46.000 அரசுப் பள்ளிகள் மற்றும் அனைத்து மெட்ரிக், சிபிஎஸ்இ மற்றும் பிற வாரியங்களை சார்ந்த சுமார் 12,000 தனியார் பள்ளிகள் இந்த தளத்தின் மூலம் பயனடைவர்.
இந்த விழாவில், அமைச்சர்கள் பொன்முடி, எம். ஆர். கே. பன்னீர்செல்வம். சிவசங்கர். அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், எம்.பி.விஷ்ணு பிரசாத், எம்.எல்.ஏக்கள் ராதாகிருஷ்ணன், இராஜேந்திரன், அய்யப்பன், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மாநில துணைத் தலைவர் முத்துக்குமார். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர். சந்திரமோகன், இ.ஆ.ப. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் முனைவர் சங்கர், கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார். உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.