மார்ச்.30.
பெட்ரோல், டீசல் , சமையல் எரிவாயு விலை உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது .நாடு முழுவதும் ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது.
தமிழ்நாட்டில் ₹5 முதல் ₹85 வரை சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது.
சுங்க கட்டணத்தை உயர்த்தக் கூடாது என பல மாநில அரசுகளும் அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வந்த நிலையில் சுங்க கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியது.
சரக்கு வாகனங்களுக்கான சுங்க கட்டணம் ₹45 – ₹240 வரை அதிகரிக்க உள்ளதால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
60 கி.மீக்கு குறைவான தொலைவில் உள்ள சுங்கச்சாவடிகள் மூடப்படும் என அமைச்சர் நிதின் கட்கரி கூறிய நிலையில், சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.