விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில்,
கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் போதுமான அளவில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் யூரியா 2344 மெட்ரிக் டன்னும், டிஏபி 260 மெட்ரிக் டன்னும். பொட்டாஷ் 1636 மெட்ரிக் டன்னும், என்.பி.கே. 1811 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 6051 மெடன் இரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் நெற்பயிர் சாகுபடிக்காக CO 55 நெல் ரகம் 1.70 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள், கம்பு -கோ 10. சோளம் Co32, K12, ஆகியவை 3200 மெட்ரிக் டன்னும், பயிறு வகை பயிர்கள் உளுந்து -VEN-8 & VBN 10, கொள்ளு பையூர் 2. ஆகியவை 7.மெட்ரிக் டன்னும் மற்றும் எண்ணெய் வித்துக்கள், நிலக்கடலை தரணி . கோ-7. oets- VR1-3. டிஎம்.வி 7 ஆகியவை 48.700 மெட்ரிக் டன்னும் இருப்பில் உள்ளது.
கரூர் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவு 652.20 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டு ஜனவரி-2025 வரை 9 மி.மீ மழை பெய்துள்ளது. அதேபோன்று, ஜனவரி மாதம் முடிய 56,957 ஹெக்டர் பரப்பளவில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி உரிய முறையில் விவசாயப் பணிகள் மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிளுக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பூச்சிநோய் விழிப்புணர்வு வழிகாட்டி வழங்கப்பட்டுள்ளது. இதன் முலம் உணவு தானிய உற்பத்தியில் நன்னிறைவு அடைவதை உறுதி செய்வதற்கும். நிர்ணயித்த உற்பத்தி இலக்கை அடைவதற்கும் சரியான தருணத்தில் பயிர் பாதுகாப்பு முறைகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும். பூச்சி நோய் தாக்குதல் அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, அவற்றை கட்டுப்படுத்திட ஏதுவாக விவசாயிகள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் பூச்சி நோய் விழிப்புணர்வு வழிகாட்டியானது விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
உயிரியல் முறையில் பூச்சிநோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் ஆரம்ப நிலையிலேயே குறைந்த செலவில் பயிர் பாதுகாப்பினை உறுதி செய்ய இயலும்.
மேலும் கரூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பாக நாட்டுக்கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய் தடுப்பூசி 2,15,000 டோஸ்கள் பெறப்பட்டு, இருவார கோழி வெள்ளைகழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் கடந்த 01.02.2025 முதல் 14.02.2025 வரை நடைபெற்றுவருகிறது. இதில் 07.02.2026 வரை 91245 கோழிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளதென கலெக்டர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன். குளித்தலை சார் ஆட்சியர் சுவாதி, வேளாண்மை இணை இயக்குநர் சிவானந்தம், வேளாண் அலுவலர் உமா, மாவட்ட வழங்கல் அலுவலர் மரு.சுரேஷ். நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் முருகேசன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சரவணன் மற்றும் நந்து சப்தஅலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.