அக்.15
துபாயில் 14வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. ஒன்பதாவது முறையாக இறுதிப்போட்டிக்கு வந்துள்ள சென்னை அணி புள்ளி பட்டியலில் 18 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து, இறுதிப்போட்டிக்கான முதலாவது எலிமினேட்டரில், 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை தோற்கடித்து 9-வது முறையாக இறுதிப்போட்டிக்கு வந்தது.. டெல்லி அணி இதில் தோல்வியடைந்ததால் புள்ளி பட்டியலில் முதலிடம் வகித்தும், தகுதிச்சுற்று 2ல் கேகேஆர் அணியுடன் விளையாடியது. டெல்லி அணி வெற்றி பெற வாய்ப்பு இருந்தும் கடைசி ஓவரில் கொல்கத்தா அணி சிறப்பாக விளையாடி வெற்றியை தட்டிப் பறித்தது.
இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர். அணி பந்து வீச முடிவு செய்தது இதனால் சென்னை அணி களமிறங்கியது ருதுராஜ் கெய்க்வாட்., டுப்ளஸிஸ் ஜோடி அதிரடியாக விளையாடியது. ருதுராஜ் கெய்க்வாட் (603 ரன்), பாப் டு பிளிஸ்சிஸ் (547 ரன்) பேட்டிங்கில் சிறப்பான இடத்தில் இருந்ததால் ருதுராஜ் 24 ரன்கள் எடுத்தபோது அதிக ரன் எடுத்ததற்கான ஆரஞ்சு நிற தொப்பியை லோகேஷ் ராகுலிடம் (626 ரன்) இருந்து பெற்றார். எனினும் அவர் 27 பந்துகளில் 32 ரன்கள் எடுத்துஅவுட் ஆனார். இதில் ஒரு சிக்ஸர் 3 பவுண்டரி அடங்கும். அடுத்து வந்த உத்தப்பா திருப்புமுனையை ஏற்படுத்தி 15 பந்துகளில் 31 ரன்கள் விளாசினார். இதில் சிக்சர்கள் 3. அடுத்து மொயின் அலி 3 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் பறக்கவிட்டு20 பந்துகளில் 37 ரன்கள் குவித்து அவுட்டாகாமல் இருந்தார். 62வது ரன்னில் கெய்க்வாட்,124 வது ரன்னில் உத்தப்பா 192 வது ரன்னில் டுப்லஸ்ஸிஸ் அவுட் ஆகினர். 3 விக்கெட் இழப்பிற்கு சிஎஸ்கே 192 ரன்கள் எடுத்திருந்தது.
193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது கொல்கத்தா அணி. முதல் பாதியில் சென்னை அணியை மிரட்டும் வகையில் ரன்கள் குவித்தது. ஹில் 51, வெங்கடேச ஐயர் 50 ரன்களை குவித்தனர். ஸ்கோர் 91 ஆக இருந்தபோது வெங்கடேச ஐயர் அவுட்டானார் அதிலிருந்து அணியின் சரிவு ஆரம்பமானது. 93, 94, 108, 129, 120, 123,125 ஆகிய ஸ்கோர்களில் அடுத்தடுத்து வீரர்கள் ஆட்டமிழந்து வெளியேறினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுனில் நரேன், திரிபாதி, தினேஷ் கார்த்திக் ஆகியோர் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே கொல்கத்தா அணியால் எடுக்க முடிந்தது. சிஎஸ்கே 27 ரன்கள் வித்தியாசத்தில் கோப்பையை தட்டிச் சென்றது.
கேப்டன் தோனியின் தலைமையில் சிஎஸ்கே அணி 2010 ,2011, 2018 ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றது. தற்போது நான்காவது முறையாக சாம்பியன் ஆகியுள்ளது.
2012, 2014-ம் ஆண்டு சாம்பியனான கொல்கத்தா அணி 3-வது வெற்றிக்கு முனைப்பு காட்டி கடுமையாக போராடி தோல்வியை தழுவியது.