நவ.25.
ஐபிஎல் கிரிக்கெட் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று (நவம்பர் 24) தொடங்கியது. முதல் நாளில் ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இரண்டாம் நாளான இன்றும் ஏலத்தில் விறுவிறுப்பு தொடர்ந்தது. ஒரு அணி குறைந்தபட்சம் 18 வீரர்களையும், அதிகபட்சமாக 25 வீரர்களையும் பெற்றிருக்கலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்துக்கு முன்பாக 5 வீரர்களை தக்கவைத்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், எம்.எஸ்.தோனி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா மற்றும் மதீஷா பதிரானா.
ருதுராஜ் கெய்க்வாட், எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, மதீஷா பதிரானா, டெவான் கான்வே, ராகுல் திரிபாதி, ரச்சின் ரவீந்திரா, ரவிச்சந்திரன் அஸ்வின், கலீல் அகமது, நூர் அகமது, விஜய் சங்கர், சாம் கரண், ஷாய்க் ரஷீத், அன்சுல் கம்போஜ், முகேஷ் சௌத்ரி, தீபக் ஹூடா, குர்ஜாப்னித் சிங், நாதன் எல்லிஸ், ஜேமி ஓவர்டான், கமலேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ணா கோஷ், ஸ்ரேயாஸ் கோபால், வன்ஷ் பேடி மற்றும் ஆண்ரே சித்தார்த்.
டெவோன் கான்வே – 6.25 கோடி
ராகுல் திரிபாதி – 3.40 கோடி
ரச்சின் ரவீந்திரா – 4 கோடி
ரவிச்சந்திரன் அஸ்வின் – 9.75 கோடி
கலீல் அகமது – 4.80 கோடி
நூர் அகமது – 10 கோடி
விஜய் சங்கர் – 1.20 கோடி
2025 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தக்க வைத்த வீரர்கள் –
ருதுராஜ் கெய்க்வாட், மதீஷா பதிரானா, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா மற்றும் தோனி
இந்நிலையில் வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை இந்த ஏலம் நிரூபித்துள்ளதாக மீண்டும் வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இது பற்றி சென்னை அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “வாழ்க்கை ஒரு வட்டம் என்று சொல்வார்கள். சிஎஸ்கே அணிக்காக 2008 – 2015 வரை நான் விளையாடினேன். அதற்காக அவர்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்”
“சிஎஸ்கே அணியில் கற்றுக் கொண்ட விஷயங்கள் தான் இன்று சர்வதேச கிரிக்கெட்டில் இந்தளவுக்கு நான் செல்வதற்கு முக்கிய காரணமாகும். சிஎஸ்கே அணிக்காக நான் விளையாடி 10 வருடங்கள் ஆகிறது. ரசிகர்களுக்காக சிஎஸ்கே அணிக்காக மீண்டும் விளையாடுவது மகிழ்ச்சி. ருதுராஜ் தலைமையில் எம்எஸ் தோனியுடன் விளையாடுவதற்காக காத்திருக்கிறேன்” என்று கூறினார். அஸ்வின் மட்டுமின்றி முதல் நாளில் டேவோன் கான்வே, நூர் அஹ்மத், கலீல் அஹ்மத் போன்ற வீரர்களையும் சென்னை அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது.