மே.30.
மீன்வளத்துறைக்காக மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பட்டு நிதியம் (FIDF) உருவாக்கப்பட்டது.இந்நிதியத்தின் நோக்கம் கடல் மற்றும் உள்நாட்டு மீன்வளத்துறைகளில் மீன்வள உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதலும், மீன் உற்பத்தியை அதிகரித்தலும் ஆகும்.
இந்நிதியம் அடையாளம் காணப்பட்ட மீன்வள உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக தகுதியுள்ள நிறுவனங்களுக்கு கீழ்காணும் நோடல் கடன் வழங்கும் நிறுவனங்கள் மூலம் சலுகை அடிப்படையில் நிதி உதவி அளிக்கிறது. தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி (நபார்டு). தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகம் (NCDC) அனைத்து பட்டியலிடப்பட்ட வங்கிகள்.
மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு உற்பத்தி நிதியம் (FIDF) ன் கீழ் மீன்வளத்துறை, நோடல் துறை கடன் நிறுவனங்கள் (NLE) ஆண்டுக்கு 5% க்கு குறையாத வட்டி விகிதத்தில் கடன் வசதி வழங்குகின்றன.மேலும் வழங்குகிறது. 3% வரை வட்டி மானியத்தை வழங்குகிறது. மேலும் அசல் தொகை திரும்ப செலுத்துவதில் இரண்டு ஆண்டுகள் விடுப்பு (Moratorium) உட்பட அதிகபட்சமாக திரும்பச் செலுத்தும் காலம் 12 ஆண்டுகள் ஆகும்.
Gogh http://dof.gov.in என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்கள் அறியலாம் என மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சத்தியமூர்த்தி நகர், தாந்தோணிமலை, கரூர் என்கிற முகவரியில் அணுகலாம்.