மார்ச்.15.
முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்புடைய இடங்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் 60 இடங்களில் நடத்திய சோதனையை அடுத்து மீண்டும் இன்று கோவை சுகுணாபுரத்தில் உள்ள வேலுமணியின் வீடு, சென்னையில் உள்ள அவரது பங்களா, அடுக்குமாடி குடியிருப்பு, அலுவலகம் அவரது சகோதரர் அன்பரசன் , தொழில் பார்ட்னர்கள் சந்திர பிரகாஷ், சந்திர சேகர் , உதவியாளர் சந்தோஷ் உள்ளிட்ட நபர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. . அமைச்சராக இருந்த போது 58 கோடி சொத்து குவித்ததாகவும்,வருமானத்திற்கு அதிகமாக 3928 % சதவிகிதம் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
சமீபத்தில் வெளி நாடு பயணம் மேற்கொண்ட வேலுமணியின் மனைவி, மகள், மகன் ஆகியோர் மேலும் உறவினர்கள் சிலர் வெளி நாடு பயணம் மேற் கொண்டார்கள். அந்த பயணத்தில் சொத்துகளை மறைத்து முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியானதால் சமீபத்தில் வெளி நாட்டிற்கு பயணம் செய்தவர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். அதே போல சேலத்தில் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் 3 பேர் வீடுகளிலும், சுவர்ணபுரியில் உள்ள பிரபலமான நகைக்கடையிலும் சோதனை நடந்து வருகின்றன. கோவையில் மாஜி அமைச்சர் வீட்டின் முன்பு அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். அவர்களுக்கு டிபன் சாப்பாடு காபி , கூல்டிரிங் ஸ்னாக்ஸ் என தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.