பிப்.20.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், சிவாயம் பகுதியில் ரூ.1.70 கோடி மதிப்பீட்டில் சேமிப்பு கிடங்கு அமைப்பதற்காக இன்று அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மண்டலம் சிவாயம் சேமிப்பு கிடங்கு வளாகத்தில் 1000 மெட்ரிக் டன் மற்றும் 1500 டன் கொள்ளளவு கொண்ட 2 கிடங்குகள் ஏற்கனவே உள்ளது. மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லினை கிடங்கில் இருப்பு வைத்திடவும். கொள்முதல் செய்யப்படும் நெல்லினை அரவைக்கு ஆலைகளுக்கு அனுப்பி பெறப்படும் அரிசியினை இருப்பு வைத்திட ஏதுவாக 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு ரூ.1.70 கோடி மதிப்பீட்டில் புதிதாக முதலமைச்சர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல், குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம். நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் முருகேசன், குளித்தலை வட்டாட்சியர் இந்துமதி, கலந்து கொண்டனர்.