ஜன.6.
கரூர் காமராஜ் மார்க்கெட் கட்டடம் சிதிலமடைந்து இருந்தது . கடந்த 10 ஆண்டுகளாக காமராஜ் மார்க்கெட்டை சீரமைத்து கட்ட வேண்டும் என்று கோரிக்கை வாக்குறுதிகளாகவே இருந்தது. கடந்த ஆண்டு காமராஜ் மார்க்கெட்டில் புதிய வணிக வளாகம் அமைக்க அரசு அனுமதி வழங்கியது. இதனை அடுத்து மார்க்கெட்டில் இயங்கி வந்த கடைகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. வணிக வளாகத்தில் பழைய கடைகளை இடிக்கும் பணி நடைபெற்றது. இந்த இடத்தில் புதிய மார்க்கெட் வணிக வளாகம் சுமார் 176 கடைகளுடன் கட்டப்பட இருக்கிறது.
ரூ. 6.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் காமராஜ் மார்க்கெட் புதிய வணிக வளாகத்தில் 176 கடைகள் கட்டப்பட இருக்கிறது. புதிய மார்க்கெட் கட்டுமான பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று பார்வையிட்டார். கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர், மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், ஆணையர் ரவிச்சந்திரன், எம்எல்ஏக்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி, துணை மேயர் சரவணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். கட்டுமான பணிகளின் விபரம் கேட்டறிந்து பணிகளை துரிதப்படுத்துமாறு அமைச்சர் உத்தரவிட்டார்.