ஜன.19.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி உத்தரவுப்படி கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக, தமிழக ஆளுநர் சட்டவிரோதபோக்கு கண்டித்தும், ஆளுநரை திரும்ப பெற கோரியும் கரூரில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்ரமணியன் கண்டன உரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் மெய்ஞ்ஞான மூர்த்தி, நகரத் தலைவர் வெங்கடேஷ், முன்னாள் நகர தலைவர் சுப்பன், நிர்வாகிகள் சின்னையன், முனீஸ்வரன், கோகலே மற்றும் பலர் கலந்து கொண்டனர். கடவூர் வட்டாரத் தலைவர் குமார் நன்றி உரையாற்றினார்.