நவ.29.
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது
தமிழ்நாடு அரசு விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. வேளாண் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற அனைத்துத் திட்டங்களையும் வேளாண் பெருமக்களுக்கு முழுமையாகக் கொண்டு சேர்ப்பதுதான் மாதந்தோறும் இதுபோன்ற விவாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகின்றன.
கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் போதுமான அளவில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் யூரியா 1053 மெட்ரிக் டன். டிஏபி. 162 மெட்ரிக் டன். பொட்டாஷ் 921 மெட்ரிக் டன், என்.பி.கே 1317 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 3.453 மெ.டன் இரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் நெற்பயிர் சாகுபடிக்காக 00 50, CR 1009, ADT 53. ADT 54. TKM 13, CO 55 உள்ளிட்ட நெல் ரகங்கள், 26.440 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள், கம்பு கோ Co32, K12, ஆகியவை 46,500 மெட்ரிக் டன்னும், பயிறு வகை பயிர்கள், உளுந்து -VBN-8 VBN 10. கொள்ளு பையூர் 2 ஆகியன 13.00 மெட்ரிக் டன்னும் மற்றும் எண்ணெய் வித்துக்கள். நிலக்கடலை தரணி கோ-6, கோ-7. டி.எம்.வி-14 என்டிஎம்.வி 7 ஆகியவை 6.558 மெட்ரிக் டன்னும் இருப்பில் உள்ளன.
கரூர் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவு 652.20 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டு நவம்பர் 2024 வரை 590.27 மி.மீ மழை பெய்துள்ளது. அதேபோன்று நவம்பர் மாதம் முடிய 16,675 ஹெக்டர் பரப்பளவில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி உரிய முறையில் விவசாயப் பணிகள் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். மேலும் கரூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பாக வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கு ஆட்கொல்லி நோய் தடுப்பூசி 3.24 இலட்சம் டோஸ்கள் பெறப்பட்டு, முகாம் கடந்த 11.11.2024 முதல் 10:12.2024 வரை நடைபெறுகிறது. இதில் 28.11.2024 வரை 286,700 வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது என்றார்.
இன்றைய தினம், விவசாயிகளிடமிருந்து பல்வேறு கோதிக்கைகள் அடங்கிய 104 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்கள்.கண்ணன். விமல்ராஜ் (நிலமெடுப்பு), குளித்தலை சார் ஆட்சியர் சுவாதிஸ்ரி. வேளாண்மை இணை இயக்குநர் திரனசிவானந்தம், கூட்டுறவு சங்ககளின் இணைப்பதிவாளர் கந்தராஜா, கால்நடை பராமரிப்புத்துறையின் இணை இயக்குநர் சாந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண். அலுவலர் உமா, கரூர் ஆர்.டி.ஓ. முகமதுபைசல், உதவி ஆணையர் கலால்.கருணாகரன், உட்பட அலுவலர்கள் விவசாயிகள் கலந்துகொண்டனர்.