ஆக.17.
டி எம் சௌந்தரராஜன் 40 ஆண்டுகள் 11 மொழியில் 10,000 திரைப்பட பாடல்கள் பாடியவர். பட்டினத்தார் அருணகிரிநாதர் போன்ற திரைப்படங்களின் நடித்த அவரது பக்தி பாடல்கள் தற்போதும் திருவிழாக்களில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற டி.எம்.எஸ் நூற்றாண்டை முன்னிட்டு மதுரையில் அவரது முழுஉருவ சிலை வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி ரூ.50 லட்சத்தில் முழு உருவசிலை மதுரை முனிச்சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் திறந்து வைத்தார். முத்தைத்தரு பத்தித் திருநகை என்ற பாடல் பின்னணிஇசையாக ஒலித்தது.
டிஎம்எஸ் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு .க.ஸ்டாலின். டி எம் எஸ்சின் மகன் பால்ராஜ் மற்றும் குடும்பத்தினர் சார்பிலும் ரசிகர்கள் சார்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டது. அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமைமையடா-.
என்ற பாடலை டிஎம்எஸ் பால்ராஜ் பலத்த ஆரவாரத்துக்கு இடையே பாடினார். அமைச்சர்கள் பொன்முடி, எவ.வேலு, கே கே எஸ் எஸ் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ரகுபதி, வெள்ளக்கோயில் சாமிநாதன், கண்ணப்பன், மூர்த்தி, எம்பி வெங்கடேசன், கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி, எம்எல்ஏக்கள் பூமிநாதன், தளபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.